கலை­ஞர் கைவி­னைத் திட்­டம் (KKT) 2025

   Sunday, April 20, 2025

கலை­ஞர் கைவி­னைத் திட்­டம் 

  • தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

  • தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலை தொடங்கவும், செய்யும் தொழிலை நவீன வடிவில் மேம்படுத்தவும் கடன் உதவிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 

  • தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை இத்திட்டதை செயல்படுத்துகிறது. 

  • கலை­ஞர் கைவி­னைத் திட்­டத்­தில் 25 வகை­யான தொழில்­கள் சேர்க்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 

  • கைவினைஞர்களுக்கு 5% வட்டியுடன் ரூபாய் 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

  • கலை­ஞர் கைவி­னைத் திட்­ட­மா­னது தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற அனைத்து வகை கைவி­னைக் கலை­ஞர்­க­ளுக்­கும் அதி­கா­ரம் அளிக்­கின்ற வகை­யில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. யாரை­யும் விலக்­கா­மல், சமூ­கப் பாகு­பாடு பார்க்­கா­மல்  “ஆர்­வ­மான கைவி­னை­ஞர்­கள், விரும்­பிய தொழி­லைச் செய்­ய­லாம்” என்­கின்ற அடிப்­ப­டை­யில்­ இந்­தத் திட்­டம் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

Kalaignar Kaivinai Thittam (KKT scheme)

No comments

Post a Comment