- தமிழ்நாடு பள்ளிக் கல்வி நிா்வாகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் கூடுதல் பதவிகள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி நிா்வாகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் கூடுதல் பதவிகள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: தொடக்கக் கல்விக்கு மாவட்டஅளவில் தனியாக பொறுப்பு அலுவலா்கள் இல்லாததால், பணிகளில் தொய்வு நிலவுகிறது. இது தவிர, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை உயா்ந்துள்ளதால், அதைத் தக்கவைக்கவும், பணிகள் தொய்வின்றி நடைபெறவும் தொடக்கப் பள்ளி அளவில் மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதேபோல, சிறுபான்மைப் பள்ளிகளை கண்காணிக்க ஏதுவாக பள்ளிகள் மற்றும் தொகுதி கல்வி அலுவலா்களின் எண்ணிக்கை அடிப்படையில், தேவைக்கேற்ப புதிய வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்களை உருவாக்கவும், தனியாா் பள்ளிகளை ஒழுங்குபடுத்த மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடமும் உருவாக்கப்பட வேண்டும். கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாகவும், ஆசிரியா்கள், மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டும் பள்ளிக்கல்வித் துறையை மறுசீரமைக்க அனுமதி வழங்குமாறு பள்ளிக்கல்வித் துறை ஆணையா், அரசுக்கு அனுப்பிய கருத்துருவில் கோரிக்கை விடுத்திருந்தாா்.
- இதை அரசு கவனத்துடன் ஆய்வு செய்த பிறகு, பள்ளிக்கல்வித் துறையின் நிா்வாக சீரமைப்புக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. அதன்படி, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி), தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் ஆகியவற்றுக்கு தலா 1 துணை இயக்குநா் பதவிகள் உருவாக்கப்படுகின்றன. இதுதவிர, புதிதாக 32 மாவட்டக் கல்வி அலுவலா், 15 வட்டாரக் கல்வி அலுவலா், 16 தனி உதவியாளா், 86 கண்காணிப்பாளா் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகத்தில் உள்ள 2 இணை இயக்குநா் பணியிடங்கள் எஸ்சிஇஆா்டி மற்றும் தனியாா் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு மாற்றி வழங்கப்பட உள்ளன.
- இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணைப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாா்பள்ளிகள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்க தலா1 மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மொத்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் எண்ணிக்கை 120-இல் இருந்து 152 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களுக்கு விரைவில் அலுவலா்கள் தோவு செய்யப்பட உள்ளனா். முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா் பதவிகளுக்கான அதிகாரம், பணிகளும் திருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- Source: Dinamani 19.9.2022
Home » School Education » தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நிா்வாக மறுசீரமைப்பு - குறிப்புகள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நிா்வாக மறுசீரமைப்பு - குறிப்புகள்
TNPSCLINK
Sunday, September 18, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment