1971 பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றிய விக்ராந்த் கப்பலின் நினைவாக உள்நாட்டிலேயே தயாராகி உள்ள விமானம் தங்கி போர் கப்பலுக்கு ஐ.என்.எஸ்.விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ஆம் தேதி கொச்சியில் நடக்கும் விழாவில் அக்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார்.
அனைத்து ஒத்திகைகளும் முடிந்து விக்ரமாதித்யா உடன் இணைந்து அடுத்தாண்டு இறுதில் விக்ராந்த் சேவையை தொடங்க உள்ளது.
இந்திய கடற்படை வடிவமைத்த ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல், கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்தில் 23,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
உலகின் மிகப்பெரிய நவீன போர்க்கப்பல்களில் ஒன்றான ஐ.என்.எஸ்.விக்ராந்தின் கட்டுமான பணிகள் 2009 ஆம் ஆண்டில் இருந்து நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு பணிகள் முடிந்து முதல் பயணத்தை தொடங்கியது.
45 ஆயிரம் டன் எடை கொண்ட இக்கப்பலில் 14 தளங்களில் 2,300 பிரிவுகள் உள்ளன. மிக் ரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உட்பட ஒரே நேரத்தில் 30 விமானங்களை விக்ராந்தின் இருந்து இயக்க முடியும்.
பெண் அதிகாரிகளுக்கு தனிப்பிரிவை உள்ளடக்கிய கப்பலில் ஒரே நேரத்தில் 1,700 பேர் பணியாற்றலாம். 18 நாட் வேகத்தில் தொடர்ந்து 7,500 நாட்டிகல் மைல் தூரத்திற்கு பயணிக்க முடியும் இக்கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட். கப்பலில் உள்ள 4 கியாஸ் விசையாழிகள் மூலம் கப்பலுக்கு தேவையான 88 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளப்படும்.
சொந்தமாக விமான தாங்கி கப்பலை காட்டும் திறன் படைத்த அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தற்போது இணைந்து உள்ளது.
No comments
Post a Comment